இரண்டு நபர்களுக்கு இடையேயான அன்பின் அல்லது உறவின் பலத்தை அதிகரிக்கும் இந்த ‘டெடி டே’ கொண்டாட்டம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்….
காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. அதற்கு முன், வாரம் முழுவதும் ஏதாவது ஒரு சிறப்பு நாள் கொண்டாடப்படுகிறது. இதன் படி இன்று (பிப்ரவரி 10) டெடி டே கொண்டாடப்படுகிறது. அன்பை வெளிப்படுத்த, பல நேரங்களில் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கி வருகின்றனர். பரிசுகள் கொடுப்பது அன்பை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உறவையும் பலப்படுத்துகிறது. இதன்படி டெடி டே நாளில், உங்கள் அன்பிற்குரியவருக்கு அழகான கரடியை (டெடி பியர்) பரிசளிக்கலாம்.
இந்த டெடியை நீங்கள் காதலிக்கும் ஒருவருக்குத்தான் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் விரும்பும் குழந்தைகளுக்கு அல்லது உங்கள் வீட்டில் உள்ள யாருக்கும் பரிசளிக்கலாம்.
டெடி டே வரலாறு:
அமெரிக்காவின் அதிபராக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் செய்த ஒரு செயலால் இன்று டெடி டே என பெயரிடப்பட்டது. மேலும் அவர் அனைவராலும் செல்லமாக ‘டெடி’ என்று அழைக்கப்படுவதன் காரணமாகவும் அது கூறப்படுகிறது.
நவம்பர் 14, 1902 அன்று, அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட், மிஸிஸிப்பியில் உள்ள வனப்பகுதியில் வேட்டையாடச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவருடன் உதவியாளர் ஹோல்ட் கோலியர்யும் உடன் இருந்துள்ளார்.
அப்போது வேட்டையின் போது காயம் அடைந்த கருங்கரடியை பிடித்து கோலியர் மரத்தில் கட்டினார். இதனையடுத்து கரடியை சுடுவதற்கு உதவியாளர் அதிபரிடம் அனுமதி கோரினார். ஆனால், கரடி காயமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு, ரூஸ்வெல்ட்டின் இதயம் உருகி, அதனை கொல்ல மறுத்துவிட்டார்.
நவம்பர் 16 அன்று, இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ இதழில் ஒரு கேலிச்சித்திரம் வெளிவந்தது. இந்த கேலிச்சித்திரம் மிகவும் பிரபலமடையவே, இந்த நாளை டெடி டேவாக கொண்டாடப்படுகிறது. மேலும், தியோடர் மற்றும் அவரது பெயரால் டெடி பியர் கண்டுபிடிக்கப்பட்டது.
காதலர் வாரத்தில் டெடி டே கொண்டாடுவதற்குப் பெண்கள் தான் காரணம். உண்மையில், பெரும்பாலான பெண்கள் டெடி பியர் பொம்மைகளை விரும்புகிறார்கள். சிறுவர்களும் டெடி பியர்களை அதிகம் விரும்பினர். அன்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த டெடி பியர் பொம்மைகள் மாறவே பிப்ரவரி 10 அன்று, காதலர் வாரத்தில் டெடி டேயும் சேர்க்கப்பட்டது.
டெடி டே முக்கியத்துவம்:
இரண்டு நபர்களுக்கிடையேயான அன்பை வெளிப்படுத்த அன்பின் அடையாலமாக இருக்கும் டெடி ஒன்றைப் பரிசளிப்பதன் மூலம் இந்த நாள் சிறப்படைகிறது. மேலும், இந்த நாளில் முன்னாள் அமெரிக்க அதிபர் தியோடர் ‘டெடி’ ரூஸ்வெல்ட் தனது வேட்டையாடும் பயணத்தின் போது ஒரு விலங்கையும் கொல்லக்கூடாது என்ற அவரது முடிவை மதிக்கும் நாளாகவும் இந்த டெடி டே அனுசரிக்கப்படுகிறது.







