ஓணம் பண்டிகைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது. கேரளாவில் 10 நாட்களுக்கு ஓணம் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். தமிழகத்திலும் கேரளாவின் அண்டை மாவட்டங்களான கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மலையாளிகள் அதிகம் வசிகக்கும் சென்னை போன்ற பகுதிகளிலும் ஓணம் பண்டிக்கை கொண்டாடப்படும்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கேரள மற்றும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாடு மற்றும் கேரள மக்கள் அனைவருக்கும் எனது இனிய ஓணம் நன்னாள் வாழ்த்துகள். அழகிய இத்திருநாள் மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளமைக்கான அறுவடைத் திருநாளாகும். மக்கள் அனைவரையும் வாழ்த்துவதற்கு வருகைதரும் மாமன்னன் மகாபலியை வரவேற்கும் விதமாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் ஒளிவிடும் பல்வேறு வண்ணங்கள் நம் அனைவருக்குமான அன்பையும், சகோதரத்துவதையும், வலிமையுறச் செய்யட்டும். மாமன்னன் மகாபலியின் வாழ்த்துக்கள் இந்த அம்ருதகாலத்தில் நம் இந்தியத் திருநாட்டின் இலக்கை நிறைவு செய்வதாக அமையட்டும் என தெரிவித்துள்ளார்.







