முக்கியச் செய்திகள் தமிழகம்

தஞ்சையில் மருத்துவமனை கழிவறை தொட்டியில் குழந்தை சடலம்

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவறை தொட்டியில், பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையை சுத்தம் செய்வதற்கு தூய்மைப் பணியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது கழிவறை தண்ணீர் தொட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் கபிலன் தலைமையிலான போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவினை ஆய்வு செய்தனர். அதில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறைக்கு சென்ற பெண் ஒருவர் அரை மணி நேரம் கழித்து வெளியே வரும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்தப் பெண் யார்? குழந்தையை கொலை செய்து சடலத்தை கழிவறை தொட்டியில் வீசிச் சென்றாரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது? அமைச்சர் பெரிய கருப்பன்

Ezhilarasan

“நீட் விவகாரத்தில் பாஜக இரட்டை நிலை” – முன்னாள் எம்.பி. மைத்ரேயன்

Jeba Arul Robinson

மத்திய அமைச்சருக்கு ஆளுநர் பதவி; 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்

Halley Karthik