முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி: ரஜினி படத்தை தயாரித்தவர்!

கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான சிவராம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரபல கன்னட நடிகர் சிவராம். நாடகங்களில் நடித்துவந்த இவர், பிரபல இயக்குநர்கள் சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ், புட்டண்ண கனகல் உட்பட சிலரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். பின்னர் 1965-ம் ஆண்டு ‘பெரத ஜீவ’ (Beratha Jeeva) என்ற கன்னட படம் முலம் நடிகராக அறிமுகமானார். பிறகு அவர் கதாநாயனாகவும் குணசித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். மறைந்த நடிகர் ராஜ்குமாருடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் ரஜினிகாந்த், கவுதமி நடித்து சூப்பர் ஹிட்டான தர்மதுரை படத்தை தயாரித்தவர் இவர்தான். அந்தப் படத்திலும் நடித்துள்ளார். அமிதாப்பச்சன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த இந்தி படமான கிரப்தார் (Geraftaar) படத்தையும் இவர் தயாரித்துள்ளார்.

சபரிமலைக்கு மாலை போட்டிருந்த இவர், அதற்கான பூஜையில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் கால் தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மூளையும் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. சுய நினைவு இல்லாமல் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவலைக்கிடமான நிலையில் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

Advertisement:
SHARE

Related posts

பல்கேரிய பேருந்து விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு

Halley Karthik

“அதிமுகவில் சாதாரண தொண்டன் முதல் எம்எல்ஏ வரை யாரும் முதல்வராக வரமுடியும்”:முதல்வர் பழனிசாமி

Halley Karthik

வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்

Halley Karthik