‘ஒளியிழந்த ஓசூர்’ – நியூஸ் 7 தமிழ் இன்று கள ஆய்வு

ஓசூர் மாநகராட்சியில் உட்கட்டமைப்புகள் எப்படி உள்ளது என்றும் அதற்கு மக்கள் கூறும் கருத்துகளை பதிவு செய்ய நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் இன்று நாள் முழுவதும் அங்கு கள ஆய்வில் ஈடுபடுகின்றனர்.   சமூக…

ஓசூர் மாநகராட்சியில் உட்கட்டமைப்புகள் எப்படி உள்ளது என்றும் அதற்கு மக்கள் கூறும் கருத்துகளை பதிவு செய்ய நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் இன்று நாள் முழுவதும் அங்கு கள ஆய்வில் ஈடுபடுகின்றனர்.

 

சமூக பொறுப்போடும் செயல்பட்டு வரும் நியூஸ் 7 தமிழ் அவ்வப்போது எடுக்கும் முன்னெடுப்புகள் மக்கள் மத்தியிலும், தமிழ்நாடு அரசு சார்பிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, அதற்கான தீர்வுகளையும் பெற்று வருகிறது. அந்த வகையில், இன்று நாள் முழுவதும் ஓசூர் மாநகராட்சியில் கள ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

 

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள ஓசூரில் உட்கட்டமைப்புகள் எந்த நிலையில் உள்ளது என்பதை இன்றைய கள ஆய்வில் நேரலையாக ஒளிப்பரப்பப்படுகிறது. மக்கள் பிரச்னைகளை மக்களிடத்தில் இருந்து நேரடியாக பெற உள்ளோம். மேலும் மாநகராட்சி இதுவரை எடுத்த நடிவடிக்கை என்ன என்பது குறித்தும் கள ஆய்வில் செய்தியாளர்கள் முழுமையாக பதிவு செய்யவுள்ளனர்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் உள்ளாகியுள்ள சிரமங்கள் குறித்தும், முறையற்ற கழிவு நீர் திட்டத்தால் தண்ணீர் தேங்குவது, கழிவு நீர் ஓடையால் தொற்று பாதிப்பு ஏற்படுவது போன்ற பிரச்னைகளும், அதற்கான தீர்வுகளும் தெரிந்து கொள்ளும் வகையில் நேரலையில் ஒளிபரப்பாகிறது. இவ்வாறு அவதிக்குள்ளாகி வரும் ஓசூர் மக்கள் சொல்வது என்ன என்பதை நியூஸ் 7 தமிழ் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். மேலும் மக்களின் சிரமங்களை போக்க மாநகராட்சி இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் குறித்தும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.