முக்கியச் செய்திகள் தமிழகம்

இந்தி திணிப்பை எதிர்த்து பேரணி – நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு

இந்தி திணிப்பை எதிர்த்து, வரும் நவம்பர் 1ஆம் தேதி சென்னை இராஜரத்தினம் திடலில் நாம் தமிழர் கட்சி மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியை நடத்துகிறது.

இந்த பேரணி குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் 11வது அறிக்கையில் இந்தியா முழுவதும் இந்தியைத் திணிக்கும் செயல்திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்தியை கட்டாயப் பயிற்றுமொழியாக்கவும், ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை கட்டாயமாக்கி, தேர்வுகளை இந்தியில் நடத்த முற்படுவதன் மூலம் இந்நாட்டில் வாழும் மற்ற மொழிவழி தேசிய இனங்களின் தாய்மொழியைத் திட்டமிட்டு அழிக்கும் கொடுஞ்செயல் அரங்கேறி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

400 ஆண்டுகளைக் கூடத் தொடாத இந்தி மொழி, 50000 ஆண்டுகளுக்கு மூத்த எங்கள் உயிருக்கும் மேலான தமிழ்மொழியை அழிப்பதா? இந்திய மொழிகளின் தொன்மையைத் தமிழிலிருந்து அறியலாம் என்றும், உலகின் மூத்த மொழியான தமிழ் இந்தியாவில் இருப்பது எங்களுக்குப் பெருமை என்றும் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் ஒரு பக்கம் கூறிக்கொண்டே, இன்னொரு பக்கம் அத்தகைய பெருமைவாய்ந்த மொழியை சிதைக்கும் வேலையில் இறங்குவதா? இது இந்திய நாடா? இந்தியின் நாடா?

உலக வரலாற்றில் எங்கும் நடந்திராத அளவுக்கு மொழிக்காக அளப்பரிய தியாகங்களையும், மகத்தான அர்ப்பணிப்புகளையும், உயிர் ஈகங்களையும் செய்த பெரும்பூமி தமிழகமாகும். பல மொழிவழி தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, தனது அதிகார வலிமையைக் கொண்டு நாடெங்கிலும் இந்தியைத் திணிக்க முற்பட்டால், இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களும் அதனை ஏற்றுக் கொண்டாலும்கூட, தமிழ் மண் ஒருபோதும் தலை வணங்காது.

தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! அந்த மொழிப்போர்க்களத்தில் முதன்மை படையாக நாம் தமிழர் கட்சி இருக்கும்! அதன் தொடக்கமாக வருகின்ற
‘நவம்பர் 1 – தமிழ்நாடு நாள்’ அன்று இந்தி திணிப்புக்கு எதிரான மாபெரும் கண்டனப் பேரணியை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவிருக்கிறது. அன்னை தமிழ் காக்க நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் இம்மாபெரும் இந்தி திணிப்பு எதிர்ப்பு பேரணியை இந்திய ஒன்றிய அரசுக்கு எதிரான முதன்மைப் போர் அணியாக மாற்ற மானத்தமிழ் பிள்ளைகள் அனைவரும் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளாகக் கூடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மீனவர்களுக்கு நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

G SaravanaKumar

‘பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்’

Arivazhagan Chinnasamy

அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Dhamotharan