மது போதையில் முதியவர் ஒருவர் போக்குவரத்து போலீஸாக மாறி ஒரு மணி நேரமாக போக்குவரத்து நெரிசலை சீர்செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
மதுரவாயல், ஆலப்பாக்கம் மேட்டுகுப்பம் செல்ல கூடிய பிரதான சாலை குண்டும்
குழியுமாக சிதிலமடைந்து உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை சந்தித்து செல்லக்கூடிய நிலை உள்ளது. இந்நிலையில், அவ்வழியாக மதுபோதையில் சென்ற முதியவர் ஒருவர் சாலையில் நெரிசலைக் கண்டு போக்குவரத்து போலீஸாக மாறி போக்குவரத்தை சீர் செய்யத் தொடங்கினார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போதையில் அவ்வழியாகச் சென்ற வாகனங்களை சீர்செய்யும் பணியில் ஈடுபட்ட முதியவரின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மதுபோதையில் போக்குவரத்து போலீஸாக மாறி முதியவர் ஒருவர் போக்குவரத்தை சீர் செய்த சம்பவம் அப்பகுதி வாகன ஓட்டிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து போலீஸார் செய்யாத பணியை மதுப்பிரியர் செய்துள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-ம.பவித்ரா








