கிருஷ்ணகிரியில் இரவு முழுவதும் பெய்த கனமழை : சாலையில் தேங்கிய நீரால் பொதுமக்கள் அவதி.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  இரவு முழுவதும் பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. பேருந்து நிலையத்தில் தேங்கிய நீரில் மூதாட்டி ஒருவர்  நிலை தடுமாறி கால்வாயில் விழுந்தார் . கிருஷ்ணகிரியில் கடந்த…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  இரவு முழுவதும் பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. பேருந்து நிலையத்தில் தேங்கிய நீரில் மூதாட்டி ஒருவர்  நிலை தடுமாறி கால்வாயில் விழுந்தார் .

கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில்  நேற்று இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்ய
தொடங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் சாலையில் தேங்கி
நின்றது.

கிருஷ்ணகிரி பழையபேட்டை பேருந்து நிலையத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றதால் பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

அப்போது பேருந்து நிலையத்திற்குள் சென்ற மூதாட்டி தண்ணீரை கடக்க முற்படும் போது
அருகில் இருந்த சாக்கடை கால்வாயில் நிலை தடுமாறி  விழுந்தார்.  அருகில்
இருந்தவர்கள் உடனே ஓடி வந்து மூதாட்டியை  மீட்ட நிலையில்  சிறிய காயங்களுடன் அவர் தப்பினார்.

நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தேங்கி நிற்கும்
மழை நீரினை  அப்புறப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.