விபத்தில் சிக்கிய இந்திய விமானப்படையின் போர்விமானம் ; 2 பெண்கள் உள்ளிட்ட3 பேர் உயிரிழப்பு…

ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் போர்விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்ததில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தானின் ஹனுமன்கார் பகுதியில் இந்திய விமானப் படையின் எம்ஐஜி – 21 ரக போர் விமானம் வழக்கமான…

ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் போர்விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்ததில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தானின் ஹனுமன்கார் பகுதியில் இந்திய விமானப் படையின் எம்ஐஜி – 21 ரக போர் விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அந்த போர்விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி கீழே விழுந்தது.

எனினும் விமானி பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேறியதால் அவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். அதேநேரத்தில் விமானம் விழுந்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.