#NZvsAFG: 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடரின் 16வது போட்டி நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில்…

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை தொடரின் 16வது போட்டி நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி பீல்டிங்கை தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக கேன் வில்லியம்சன் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. ஆப்கானிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யாமல், கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் இன்றைய போட்டியிலும் விளையாடியது. இதையடுத்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. மிடில் ஆர்டரில் களமிறங்கிய கிளென் பிளிப்ஸ் 71, கேப்டன் டாம் லாதம் 68 ரன்கள் அடித்ததோடு சிறப்பான பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.

வில்லயம்சனுக்கு பதிலாக களமிறங்கிய வில் யங் அரைசதம் விளாசி 54 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் பவுலர்களில் நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரஷித் கான் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருந்து வரும் சென்னை ஆடுகளத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற வேண்டுமானால் 289 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய குர்பாஸ் 11 ரன், இப்ராகிம் ஜட்ரான் 14 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய ரஹ்மத் ஷா 36 ரன், ஹஸ்மத்துல்லா ஷாகிடி 8 ரன், ஓமர்சாய் 27 ரன், நபி 7 ரன், ரஷீத் கான் 8 ரன், முஜீப் 4 ரன், நவீன் 0 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 139 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 149 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி தரப்பில் சான்ட்னெர், பெர்குசன் தலா 3 விக்கெட்டும், பவுல்ட் 2 விக்கெட்டும், ஹென்றி, ரவீந்திரா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி புள்ளிபட்டியலில் 8 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.