புதுச்சேரி மாநிலத்தில் எண்ணப்பட்டு வரும் தபால் வாக்குகளில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில், காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை ஓரணியாகவும், எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
கடந்த மாதம் 6 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. புதுச்சேரியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
இதில் தபால் வாக்குகளில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.







