ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு 75 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் பணிகளில் சுமார் 16 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பல தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருக்கின்றன. இந்நிலையில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிணியில் இருக்கிறார்.







