தபால் வாக்குகளில் திமுக முன்னிலையில் இருக்கிறது
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதில் அதிமுக, திமுக தலைமையில் ஓர் கூட்டணியும், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தலைமையில் ஓர் அணியும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மற்றொரு அணியும் களம் இறங்கின. சீமான் தலைமையிலான நாம் தமிழா் கட்சி, தனியாக போட்டியிட்டது. தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு 75 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் பணிகளில் சுமார் 16 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது.







