“சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை” – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

“சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று எங்கும் கூறப்படவில்லை;  அப்பா ஒரு ஆன்மீகவாதி;  அவரை ஏன் அப்படி எல்லாரும் கூறுகிறார்கள்?;  தன்னுடைய அப்பா சங்கி அல்ல என்பது ஐஸ்வர்யாவின் கருத்து என நடிகர் ரஜினிகாந்த்…

“சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று எங்கும் கூறப்படவில்லை;  அப்பா ஒரு ஆன்மீகவாதி;  அவரை ஏன் அப்படி எல்லாரும் கூறுகிறார்கள்?;  தன்னுடைய அப்பா சங்கி அல்ல என்பது ஐஸ்வர்யாவின் கருத்து என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘லால் சலாம்’.  இந்தப் திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.  இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் வரும் பிப்.9 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 25ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது விழா மேடையில் பேசிய’லால் சலாம்’ திரைப்படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  ‘’அப்பாவை சங்கின்னு சொல்லும் போது கோபம் வரும்.  இப்போது சொல்கிறேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது.  சங்கியாக இருந்திருந்தால் அவர் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்திருக்கமாட்டார். அவர் மனிதநேயவாதி” என கூறி இருந்தார்.

இந்நிலையில்,  இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினி காந்த்திடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அதற்கு பதில் அளித்த அவர், “சங்கி என்ற வார்த்தை கெட்டவார்த்தை இல்லை.  எனது மகள் சரியாகவே பேசி உள்ளார்.  அப்பா ஆன்மீகவாதி அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பதுதான் ஐஸ்வர்யாவின் பார்வை என்றார்.

அதனை தொடர்ந்து,  லால் சலாம் படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,  “லால் சலாம் படம் நன்றாக வந்திருக்கிறது மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் படமாக இருக்கும்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.