காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய நீதி நடைப்பயணம், பிகார் மாநிலத்தில் இன்று நுழைந்தது.
நாட்டில் கிழக்கில் இருந்து மேற்காக 6,713 கி.மீ. தொலைவுக்கு ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மணிப்பூரில் இருந்து கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய இப்பயணம், மேற்கு வங்கத்தை கடந்த 25-ஆம் தேதி எட்டியது.
இதையும் படியுங்கள்; பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு – ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதி!
இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணமான ‘இந்திய நீதி பயணம்’ ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்த நடைப்பயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த நடைப் பயணம் மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது. ஜனவரி 20 ஆம் தேதி ராகுல் காந்தியின் ‘இந்திய நீதிப் பயணம்’ அருணாச்சல பிரதேசம் சென்றடைந்தது. தொடர்ந்து அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டார்.
இதையடுத்து, இந்த நடைப்பயணம், மேற்கு வங்கத்தை கடந்த 25-ஆம் தேதி எட்டியது. மேலும், 2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இந்த மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் தனது பயணத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி- 28) மீண்டும் ராகுல் காந்தி தொடங்கினார்.
சிலிகுரி அருகே நிறைவடைந்த அவரது பயணம், இன்று கிஷன்கஞ்ச் வழியாக பீகார் மாநிலத்துக்குள் நுழைந்தது. அப்போது அங்கு கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, 31-ஆம் தேதி மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. பீகார் மாநிலத்தில் நேற்று மிகப் பெரிய அரசியல் பரபரப்பு நிகழ்ந்த நிலையில், ராகுல் காந்தியின் நடைப்பயணம் அந்த மாநிலத்துக்குள் நுழைந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.









