யூபிஐ உடன், கிரெடிட் கார்ட்களை இணைத்து பேமெண்ட் செய்யும் சேவை அறிமுகமாகியுள்ளது இதன்மூலம் இனி யூபிஐ தளத்தை டிஜிட்டல் கடன் அட்டையாகவும் பயன்படுத்த முடியும்.
யூபிஐ வாயிலாக வாடிக்கையாளர்கள், முன்கூட்டியே ஒப்புதல் அளிக்கப்பட்ட கடனை பெற்று பயன்படுத்திக்கொள்ள முடியும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
2023-24 ம் நிதியாண்டின், இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் நிதிக்கொள்கை குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அப்போது பேசிய ரிசரவ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் , நாட்டில் டிஜிட்டல் வங்கி சேவை நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. அரசின் நேசனல் பேமண்ட் கார்ப்ரேசன் நிறுவனம் உருவாக்கிய யூபிஐ தளத்தில் அதிகபட்ச அளவில் வங்கிகளிடையே பரிமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனையும் படியுங்கள்: ரெப்போ வட்டி விகிதத்தில் உயர்வு இல்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சில மாதங்களுக்கு முன்பு யூபிஐ உடன், கிரெடிட் கார்ட்களை இணைத்து பேமெண்ட் செய்யும் சேவை அறிமுகமாகியுள்ளது. இதனால் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும், கிரெடிட் கார்டு சேவையை, யூபிஐ வழியாக பெறலாம் .
குறிப்பாக மாத கடைசியில் தடுமாறும் பலருக்கு பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இனி யூபிஐ தளத்தை டிஜிட்டல் கடன் அட்டையாகவும் பயன்படுத்த முடியும் என்றும் வங்கியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
– ரா.தங்கபாண்டியன் , நியூஸ்7 தமிழ்







