எனக்குள் தூங்கிட்டிருந்த நடிகனை எழுப்பி விட்டவர் வெற்றிமாறன் – ராஜீவ் மேனன் பேட்டி

எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த நடிகனை எழுப்பி விட்டவர் வெற்றிமாறன்தான் என விடுதலை படத்தில் நடித்த ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை பாகம்-1 படத்தின் நன்றி தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு…

எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த நடிகனை எழுப்பி விட்டவர் வெற்றிமாறன்தான் என விடுதலை படத்தில் நடித்த ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை பாகம்-1 படத்தின் நன்றி தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு தேனாம்பேட்டை ஹயாத் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி, இயக்குனர் வெற்றிமாறன், சேத்தன், ராஜிவ் மேனன், பவானி ஶ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை படத்தில் தலைமைச் செயலாளர் கதாபாத்திரத்தில் நடித்த ராஜிவ் மேனன் தெரிவித்ததாவது..

” வெற்றிமாறன்  கேட்டதால்தான் இப்படத்தில்  நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற பிறகு 6 பக்க வசனம் எப்படி பேசுவது என்றே எனக்கு  தெரியவில்லை. அப்போது வெற்றிமாறன் நடிக்கவேண்டாம் நீங்கள் நீங்களாக இருந்தால் போதும் என்றார்.

இதனையும் படியுங்கள்: விடுதலை படத்தின் வெற்றி விழா : கண்கலங்கியபடியே நன்றி தெரிவித்த நடிகர் சூரி

கமல்ஹாசனின் ”எனக்குள்ள தூங்கிட்டு இருக்க மிருகத்த எழுப்பாதிங்க” என்ற வசனத்தை  போல எனக்குள்ள தூங்கிட்டு இருந்த நடிகனை எழுப்பி விட்டவர் இயக்குனர் வெற்றி மாறன் தான்.

நிஜமான மனிதனை படத்தில் காட்டியிருக்கிறார்கள். ஒரு தமிழனை படத்தில் காட்டுதென்றால்  இப்படி தான் காட்ட முடியும். அவனது காதலியை  அடிக்கும் போது இப்படி தான் அவனால்  இருக்க முடியும் என்று வெற்றிமாறன் இப்படத்தில் காண்பித்து உள்ளார்.

இதனையும் படியுங்கள்: இந்த வெற்றிக்கு பிறகுதான் சூரி கவனமாக இருக்க வேண்டும் – விஜய் சேதுபதி அட்வைஸ்

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய நடிகர் சேத்தன் தெரிவித்ததாவது..

சினிமாவில்  எப்போதுமே அடுத்த கட்டத்திர்கு  செல்ல வேண்டும் என்றால் வெற்றி படத்தில் இருக்க வேண்டும் அதே போல  வெற்றியின் படத்திலும் இருக்க வேண்டும்.
பல முயற்சிக்கு பிறகு இந்த படத்தில் வாய்ப்பளித்த வெற்றிமாறனுக்கு நன்றி. சூரி
மிக அருமையாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.