“அன்னைத் தமிழில் அர்ச்சனை” அறிவிப்பு பலகை வெளியீடு

ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 47 திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். https://twitter.com/PKSekarbabu/status/1422580484391854085 இது குறித்து இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில்,…

ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 47 திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/PKSekarbabu/status/1422580484391854085

இது குறித்து இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று, “அன்னைத் தமிழில் அர்ச்சனை” திட்டத்தின் அறிவிப்பு பலகையை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை (06.08.2021) அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 47 திருக்கோயில்களில் நடைமுறைப் படுத்தப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இதன் மூலம் திருக்கோயில்களில் “அன்னை தமிழில் அர்ச்சனை” என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு அர்ச்சகர்களின் பெயர், தொலைப்பேசி எண் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.