வடகிழக்குப் பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை எழிலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிம் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் அவ்வப்போதி அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடம் ஆலோசனை மேற்கொணடு வருகிறார். அதன்படி அக்டோபர் 18ஆம் தேதி சென்னை பெருநகர மாநகராட்சியின் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து சென்னை காமராஜர் சாலை அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து இன்று சென்னை மண்டல பொறுப்பு அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து சென்னையில் எழிலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொணடார். அப்போது பருவமழை நிலவரம், மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாகவும், நெல்லை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.