சோழவரம் அருகே இயங்கி வந்த போலி கலப்பட ஆயில் நிறுவனத்தை காவல்துறையினர் கண்டுபிடித்து நடவடிக்கை – இரண்டு டேங்கர் லாரிகள் பறிமுதல்.
திருவள்ளூர் மாவட்டம் , சோழவரம் அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் , அவலாஞ்சி
இம்பேக்ஸ் பிரைவேட் லிமிடெட் போலி கலப்பட ஆயில் தொழிற்சாலையில், மும்பையைச்
சேர்ந்த துளசி சிங் ராஜ் புத் என்பவர் விநியோகம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது .
அந்நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்த உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அசோக் ,முகேஷ் குமார் மற்றும் அங்கு பணியில் இருந்த ராம் சிங், பிந்த்ராபிரசாத் , அசோக்குமார் , தீபக் மற்றும் டேங்கர் லாரியின் ஓட்டுனர் உதயராஜ் ஆகியோரை , திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இரண்டு லாரிகளுடன் இரண்டு லட்சத்து எழுபதாயிரம் லிட்டர் போலி கலப்பட ஆயிலை பறிமுதல் செய்தனர்.
மேலும், சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், போலீசாரின் வாகன சோதனை நடைபெறும் இடம் அருகிலேயே, கடந்த இரு வருடங்களுக்கு முன் போலி கலப்பட ஆயில் தயாரிப்பு இடத்தை கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் தற்போது , மீண்டும் அதன் அருகிலேயே மற்றொரு தொழிற்சாலை , போலி ஆயில் தயாரித்து விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
போலி ஆயில் விற்பனை மூலம் அதனை பயன்படுத்தும் வாகனங்கள் பழுதாகிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு இதுபோன்று போலிகளை தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீதும் , அதனை வாங்கி விற்பனை செய்பவர்கள் மீதும், உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
-கு.பாலமுருகன்







