’யாரும் கேமுக்கு அடிட் ஆகாதிங்க’ -உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்

கரூரில் ஃப்ரீ பயர் விளையாட்டில் நண்பர் துரோகம் செய்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியை அடுத்த சிவசக்தி நகரில் வசித்து…

கரூரில் ஃப்ரீ பயர் விளையாட்டில் நண்பர் துரோகம் செய்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட
சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியை அடுத்த சிவசக்தி நகரில் வசித்து வந்த சத்தியபாமா என்பவரின் மகன் சஞ்சய் (23 வயது) தனியார் கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் படித்து வந்துள்ளார். ஆனால், கல்லூரிக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் கடந்த ஒரு ஆண்டு காலமாக கல்லூரிக்கு செல்ல முடியாத நிலையில் வீட்டிலேயே முடங்கியுள்ளார். அவ்வபோது, நண்பர்களுடன் சென்று விழாக்களில் சாப்பாடு பரிமாறுவது போன்ற சிறு சிறு தினக் கூலி வேலைகளை செய்து வந்துள்ளார்.

சஞ்சய்-க்கு 12-ஆம் வகுப்பு படிக்கும் போது, ஃப்ரீ பயர் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிக்கு சென்று வந்த பிறகு ஆன்லைன் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரனோ பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டு இருந்ததால், அவர் தொடர்ந்து ஆன்-லைன் விளையாட்டில் அதிக நாட்டம் காட்டியுள்ளார். பல நேரங்களில், இரவு பகலாக விளையாடி நிறைய பணம் சேர்த்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

https://twitter.com/news7tamil/status/1534097485156974594

நண்பர்களுடன் சேர்ந்து கிடைக்கின்ற வேலைகளை செய்து வந்த நிலையில், சஞ்சயின் நண்பர் ஒருவர் அவரின் ஃப்ரீ பயர் கேமின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை திருடி தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டு, செல்போன் தொலைந்து விட்டதாக கூறி ஏமாற்றியுள்ளார். மேலும், சஞ்சயிடம் இருந்து திருடப்பட்ட ஐடி மற்றும் பாஸ்வேர்டை கொண்டு நண்பன் விளையாடுவதை பார்த்து சக நண்பர்களிடம் கூறி தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘தொடர்ந்து இதுபோல் பேசினால்… ஆதீனத்திற்கு அமைச்சர் எச்சரிக்கை’

இது சம்பவம் நடந்து 6 மாத காலம் ஆன நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக மற்றொரு ஐடி மற்றும் பாஸ்வேர்டை கொண்டு விளையாடி வந்துள்ளார். அப்போது, மற்றொரு நண்பர் செல்போனை பெற்று பேசி விட்டு தருவதாக கூறி, வாங்கி ஐடி மற்றும் பாஸ்வேர்டை திருடிக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய அந்த கணக்கின் மதிப்பு 1 லட்சம் ரூபாய் இருக்கும் என சஞ்சய் சக நண்பர்களிடம் கூறி மீண்டும் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த அவர், 2 நாட்களுக்கு முன்பு, அம்மா இல்லாத நேரத்தில், புடவையை மாட்டிக்கொண்டு, உயிரை மாய்த்துக்
கொண்டுள்ளார். அவர் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பாக நண்பர்களுக்கு செல்போனில் பேசியும், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்திருந்தது, அவரது நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தசம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சஞ்சயின் அம்மா சத்தியபாமா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

 

உயிரிழப்பு  தீர்வல்ல, உயிரிழப்பு எண்ணத்திலிருந்து விடுபட சினேகா உயிரிழப்பு தடுப்பு உதவி மையத்தை (044 -24640050) தொடர்புக்கொள்ளுங்கள்… 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.