தொடர்ந்து இதுபோல் பேசினால்… ஆதீனத்திற்கு அமைச்சர் எச்சரிக்கை

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் செயலுக்கு உரிய சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை சத்தியவாணி முத்து நகரில் குடியிருக்கும் மக்களை புளியந்தோப்பு கே.பி.பூங்கா குடியிருப்புக்கு…

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் செயலுக்கு உரிய சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியவாணி முத்து நகரில் குடியிருக்கும் மக்களை புளியந்தோப்பு கே.பி.பூங்கா குடியிருப்புக்கு மாற்றுவது தொடர்பாக மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், துணை ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

https://twitter.com/news7tamil/status/1534085532300750848

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பக்தர்களுக்கும், கோயில் நிர்வாகிகளுக்கும் கருத்து வேறுபாடு இருக்க கூடாது என தெரிவித்தார். சிதம்பரம் நடராசர் கோயில், பொது கோவில் என்று நீதிமன்றமே தெரிவித்துள்ள நிலையில், சட்டப்படி ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக கூறினார். மேலும், தீட்சிதர்கள் செயலுக்கு உரிய சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்டார்.

அண்மைச் செய்தி: ‘பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள படத்தின் டீசர் வெளியீடு’

தொடர்ந்து பேசிய அவர், ஆதீனங்கள் அரசுக்கு ஆதரவாக இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க மதுரை ஆதீனம் முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு தெரிவித்தார். ஆதீனங்கள் சைவத்தை சார்ந்தவர்கள், சைவம் என்றாலே தமிழ், தமிழை வளர்க்கும் ஆட்சி மு.க.ஸ்டாலின் ஆட்சி எனவும், மதுரை ஆதீனம் தொடர்ந்து இதுபோல் பேசினால் பதில் சொல்ல பல வகைகள் இருக்கின்றன என்பதை அடக்கத்தோடு தெரியப்படுத்தி கொள்வதாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.