சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற
மதிப்பீட்டு குழு ஆய்வைத் தொடங்கியது.
டிஆர்பி ராஜா தலைமையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், சேலம் பள்ளப்பட்டி ஏரியை முதற்கட்டமாக ஆய்வு செய்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவைக்குழு தலைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
பாலசுப்ரமணியன் மற்றும் பாமக சட்ட மன்ற உறுப்பினர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள்
பங்கேற்றுள்ளனர்.
பள்ளப்பட்டி ஏரி மேம்பாட்டு பணிகளை பார்வையிட்ட இக்குழுவினர் , சீலநாயக்கன்
பட்டியில் உள்ள வேளாண் துறையின் மண் பரிசோதனை நிலையம், உரக் கட்டுப்பாட்டு
ஆய்வகம், பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் சூரமங்கலம் முத்துநாயக்கன்பட்டி
கட்டப்பட்டுள்ள மேம்பாலம் பணியை ஆய்வு செய்யும் குழுவினர், அதனை அடுத்து
ஓமலூர் , மேச்சரி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.







