2022 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான மதிப்புமிக்க நோபல் பரிசு கரோலின் ஆர் பெர்டோஸி, மோர்டன் மெல்டல் மற்றும் கே பாரி ஷார்ப்லெஸ் ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோபல் பரிசானது ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும் பணக்காரரும் தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபலின் விருப்பப்படி அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான சாதனைகளுக்கான பரிசுகள் 1901 முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
கோவிட் தொற்று காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஸ்டாக்ஹோமில் நோபல் விருந்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் வளர்ச்சிக்காக” ஆய்வு மற்றும் “பாரி ஷார்ப்லெஸ், மோர்டன் மெல்டால் வேதியியலின் செயல்பாட்டு வடிவத்திற்கு அடித்தளம் அமைத்ததுள்ளனர். இதன் மூலக்கூறு கட்டுமான தொகுதிகள் விரைவாகவும் திறமையாகவும் ஒன்றிணைக்கும் ஆராய்ச்சிகளுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கரோலின் பெர்டோஸி, வேதியியலை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு சென்று உயிரினங்களில் பயன்பாட்டைக் குறித்து ” ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் என்ற ஒரு ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார். உயிர் இயக்கவியலில் மூலக்கூறுகள் மற்றும் பயோ ஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் மேம்பாட்டுக்காக இம்மூவருக்கும் வேதியியலுக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கே பாரி ஷார்ப்லெஸ் இரண்டாவது முறையாக நோபல் பரிசை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு வெறும் ஐந்து பேர் மட்டுமே இது போன்று ஒன்றிற்கும் மேற்பட்ட முறை நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
இந்த நோபல் பரிசானது ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும் பணக்கார தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபலின் விருப்பப்படி அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான சாதனைகளுக்கான பரிசுகள் 1901 முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
கோவிட் தொற்று காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஸ்டாக்ஹோமில் நோபல் விருந்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.