மொத்தமாக நியமித்துள்ள 16 கள நடுவர்கள் கொண்ட பட்டியலில் ஒரே ஒரு இந்திய நடுவராக நிதின் மேனன் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந்தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 45 ஆட்டங்கள் இந்த தொடர் அடிவெயிட் பிரிஸ்பேன், கிலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெரத் சிட்னி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறவுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான நடுவர்களை ஐசிசி இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் நியமித்துள்ள 16 கள நடுவர்கள் கொண்ட பட்டியலில் ஒரே ஒரு இந்திய நடுவராக நிதின் மேனன் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். மேலும் ஆட்ட நடுவர்களாக 4 பேரை நியமித்துள்ளது ஐசிசி.
இதன்படி அட்ரியன் ஹோல்ட்டாக் அஸீம் டர் ஆஸான் ராஸ்பா, கிறிஸ்டோபர் பிரௌன், கிறிஸ்டோபர் சுஃபாவி, ஜோயல் வில்சன். குமார தர்மசேனா, லேங்டன் ருசர், மரைஸ் எராஸ்மஸ், மைக்கேல் கல். நிதின் மேனன், பால் ரீஃபல், பால் வில்சன், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்பாரோ, ராட்னி டக்கர் ஆகியோர் கள நடுவர்களாகவும் ஆண்ட்ரு எய்கிராஃப்ட் கிறிஸ்டோபர் பிராட் டேவிட் பூன், ரஞ்சன மதுகயே ஆட்ட நடுவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.