கிளாடியா கோல்டினுக்கு நோபல் பரிசு! பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெறும் 3-வது பெண்!

பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பான ஆய்வு செய்ததற்காக, அமெரிக்காவை சேர்ந்த கிளாடியா கோல்டின் என்பவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடன் அறிவியல் அகாதெமி, நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகளை கடந்த…

பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பான ஆய்வு செய்ததற்காக, அமெரிக்காவை சேர்ந்த கிளாடியா கோல்டின் என்பவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடன் அறிவியல் அகாதெமி, நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகளை கடந்த 2-ம் தேதி முதல் அறிவித்து வருகிறது. ஏற்கனவே மருத்துவம், இலக்கியம், வேதியியல், இயற்பியல், அமைதி என ஐந்து துறைகளில் சாதித்தவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டின் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பான இவரது ஆய்வுக்காக நடப்பாண்டுக்கான பொருளாதார அறிவியலில் நோபல் பரிசு பெற அமெரிக்காவை சேர்ந்த கிளாடியா கோல்டின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிளாடியாவின் இந்த ஆய்வு நேற்று, இன்று நாளை என எக்காலத்துக்கும் பொறுந்தும் வகையில், அமைந்திருப்பது தனிச் சிறப்பு.பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண் கிளாடியா கோல்டின் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.