கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் செல்ல எட்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது . இங்கு பெரும்பாலான சுற்றுலா இடங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வனத்துறையின் சிறப்பு அனுமதி வாங்கி செல்லும் பகுதியாக பேரிஜம் ஏரி உள்ளது . தொடர்ந்து கடந்த இரண்டாம் தேதி யானைகள் நடமாட்டம் இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறையானது தடை விதித்திருந்தது .
இந்த நிலையில் இன்றுடன் எட்டு நாள் ஆகியும் யானைகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருவதால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை நீடித்து வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
மேலும் யானையை வனத்துறையினர் கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மோயர் சதுக்கம் பகுதியில் கடைகளை யானைகள் சேதப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது .
– வெற்றிவேல்







