“நோ போஸ்டர், பொதுச் செயலாளர் என கோஷமிடக்கூடாது” – இபிஎஸ் அறிவுறுத்தல்

ஒற்றை தலைமை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டக் கூடாது, முழக்கங்களை எழுப்பக்கூடாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அதிமுகவில் சமீப நாட்களாக ஒற்றை தலைமை குறித்து பேச்சுகள் தொடர்ந்து…

ஒற்றை தலைமை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டக் கூடாது, முழக்கங்களை எழுப்பக்கூடாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

அதிமுகவில் சமீப நாட்களாக ஒற்றை தலைமை குறித்து பேச்சுகள் தொடர்ந்து மேலெழுந்து வரும் நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்நிலையில் போஸ்டர் ஒட்டக் கூடாது, பொதுச் செயலாளர் என்ற கோஷமிடக்கூடாது என இபிஎஸ் தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சென்னையில் இருந்து சேலம் வருகை தந்தார். அவருக்கு வரவேற்பளித்த ஆதரவாளர்கள் பல்வேறு அரசியல் முழக்கங்களை எழுப்பினர்.

ஏற்கெனவே ஒற்றை தலைமை குறித்து, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்த நிலையில் கட்சிக் கூட்டங்களில் சலசலப்பும் ஏற்பட்டன. இதனை கவனத்தில் கொண்டு தனது ஆதரவாளர்களுக்கு ஒற்றை தலைமை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என்றும் முழக்கங்களை எழுப்பக்கூடாது எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.