உபி.யில் இந்துக்களால் பாதுகாக்கப்படும் மசூதி

உ.பி.யின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கவுஸ்கர் என்ற கிராமத்தில், முஸ்லிம்கள் யாரும் வசிக்காததால் அங்குள்ள மசூதியைப் பாதுகாக்கும் முயற்சியில் அங்குள்ள இந்துக்கள் ஈடுபட்டுள்ளனர். உ.பி.யின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கவுஸ்கர் என்ற கிராமம் ஒரு…

உ.பி.யின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கவுஸ்கர் என்ற கிராமத்தில், முஸ்லிம்கள் யாரும் வசிக்காததால் அங்குள்ள மசூதியைப் பாதுகாக்கும் முயற்சியில் அங்குள்ள இந்துக்கள் ஈடுபட்டுள்ளனர்.

உ.பி.யின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கவுஸ்கர் என்ற கிராமம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த செழுமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. குறிப்பாக 1760 மற்றும் 1806-க்கு இடையில் முகலாய பேரரசர் ஷா ஆலமின் ஆட்சியின் போது சமஸ்தானமாக இருந்துள்ளது. ஆனால், 250 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள இந்த பாழடைந்த மசூதியைத் தவிர, அதன் புகழைப் பட வேறு ஒன்றும் அங்கு இல்லை என்றநிலையில், தற்போது அந்த கிராமத்தில் முஸ்லிம்கள் யாரும் வசிக்காததால், 1940 முதல் மசூதியில் பிரார்த்தனைகள் எதுவும், செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில், ஒரு சில உள்ளூர் இந்துக்கள் இந்த நூற்றாண்டு பழமையான கட்டமைப்பிற்கு உயிர் கொடுக்க முன் வந்துள்ளனர்.

தற்போது இந்த கிராமத்தை வழிநடத்தி வருகிறார், சௌத்ரி நீரஜ் ரோட் என்ற சமூக ஆர்வலரின் முயற்சியில் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளனர். அவரின் தலைமையில் தான் கிராம மக்கள் அனைவரும் உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தெரிவிக்கையில், “இந்த மசூதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக உள்ளோம், ஏனெனில் கடந்த காலத்தில் இந்த பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு மரபாக இந்த இடம் இருந்தது. தற்போது பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான முஸ்லிம்கள் இந்த இடத்திற்கு வருகிறார்கள். நாங்கள் இதை மத சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” எனக் கூறுகின்றனர்.

அண்மைச் செய்தி: ‘சாதி உணர்வைத் தூண்டும் வகையில் பேசிய 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்’

மசூதியின் பெரும்பாலான காலி நிலங்கள் “ஆக்கிரமிப்பு” செய்யப்பட்டுள்ளதாகக் கிராம மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி சஞ்சய் சவுத்ரி கூறுகையில், “பள்ளிவாசல் நிலம் ஏதேனும் விவசாயிகளின் வயலில் இருந்தால், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அதனை மீட்டு, இந்த இடத்தை பாதுகாக்கவே அனைவரும் விரும்புவதாகவும், இது ஒரு எடுத்துக்காட்டான செயலாக அமையும் எனவும், நாட்டில் மத நல்லிணக்கம் ஏற்படும் எனவும் அவர் கூறுகிறார்.

மேலும், அந்த இடத்தின் நிலை குறித்து அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஷிவ் லால் கூறுகையில், “சுத்தத்தை உறுதி செய்வதற்காக 50 முதல் 60 கிராம மக்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் அவர், பல இஸ்லாமியர்கள் மசூதியைப் பார்க்க வருவதால், அதன் பாதுகாப்பு முக்கியமானது எனவும், அதற்கு அரசு உதவ வேண்டும் எனத் தெரிவிக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.