தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு மண்டல அலுவலகத்தில் இயங்கி வரும் கொரோனா ஆலோசனை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆக்சிஜன் அளவு 92 அளவுக்கு கீழ் சென்றால் மட்டுமே மருத்துவமனை உதவியை நாட வேண்டும் என அறிவுறுத்திய அவர், இந்த கொரோனா அலையில் ஆக்சிஜன் தேவையில்லை என்பதால், சிஎஸ்ஆர் பணியில் ஈடுபடுவோரிடம் இருந்து பல்ஸ், ஆக்சிமீட்டரை மாநகராட்சி கொடுக்கலாம் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், தீவிர நுரையீரல் தொற்று மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ளவேண்டும் என்றும், சிறிய அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டு தனிமையில் இருக்கலாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், முழு ஊரடங்கு குறித்து கேள்வி எழுந்ததில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.