முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரடங்கு நீட்டிப்பு : புதிய கட்டுப்பாடுகள்

தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ம் தேதிவரை நீட்டிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கூடுதலாக பின்வரும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 14 ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் செல்ல அனுமதியில்லை எனவும் ஜனவரி 16 ( ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது போருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 % பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து

Arivazhagan CM

ஊரடங்கின் பலன் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து!

வெள்ளியுடன் தொடங்கிய வெற்றிப் பயணம்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்

Vandhana