முக்கியச் செய்திகள் உலகம்

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவுமில்லை: ரஷ்ய, இணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ்

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவுமில்லை என ரஷ்ய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்துள்ளார்.

சோவியத் ஒன்றியம் உடைந்த பின்பு தனி நாடாக மாறிய உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்ரமித்தது. இதனை அடுத்து, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைனை சேர்க்க அமெரிக்கா முயற்சித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, உக்ரைன் மீது படை எடுக்க எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களை நிறுத்தியது.

இது தொடர்பாக இருநாட்டு தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என பைடன் எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படும் என புதின் பதில் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் இருநாட்டு அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த திட்டமோ, நோக்கமோ தங்களிடம் இல்லை என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

உரிய ஒப்புதல்களை பெறாத தண்ணீர் லாரிகளை, தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது : சென்னை உயர் நீதிமன்றம்

Halley Karthik

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

Halley Karthik

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

Halley Karthik