முக்கியச் செய்திகள் கொரோனா

ஜனவரி 31-ஆம் தேதி வரை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை

ஊரடங்கு காரணமாக வரும் 31-ஆம் தேதி வரை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும் 31-ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில், ஊரடங்கு காரணமாக வரும் 31-ஆம் தேதி வரை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுகள் பற்றிய அறிவிப்பு, தேர்வு நடைபெறும் ஒரு வாரம் முன்பு வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும், கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் தொடரும் என கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இசை உலகின் பேரரசி ஸ்ரேயா கோஷலின் கதை.

G SaravanaKumar

கேரளாவில் ‘போதைப் பொருள் ஜிகாத்’: பேராயர் பரபரப்பு பேச்சு

EZHILARASAN D

சென்னை ஐஐடியில் தீவிரமடையும் கொரோனா

Janani