ஆசிரியர் தேர்வு தமிழகம்

சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை! – பிரேமலதா விஜயகாந்த்

சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லையென, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக கொடிநாள் விழாவையொட்டி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சார வாகனத்தில் பேரணியாக, கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து பிரச்சார வேனில் இருந்தபடியே, விஜயகாந்த் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து தொண்டர்கள் அனைவருக்கும் கட்சி கொடிநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது குழந்தை ஒன்றுக்கு விஜயலதா எனவும், விஜயகாந்த் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

தொடர்ந்து தேமுதிக தலைமை அலுவலகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்து தங்களிடம் கேட்பதை விட, அதிமுகவிடம் தான் கேட்க வேண்டும் என கூறினார். தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால், அதிமுகவாக இருந்தாலும், திமுகவாக இருந்தாலும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், எனவும் அவர் வலியுறுத்தினார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளதால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனக்கூறிய பிரேமலதா, இனி ஊடக விவாதங்களில் தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்பர் எனவும் தெரிவித்தார் . தேமுதிக தனித்து போட்டியிட்டால் , 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற பிரேமலதா விஜயகாந்த், சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

கூடங்குளம் அணு உலை விரிவாக்கத்தை கைவிட வேண்டும்: திருமாவளவன்

Vandhana

“எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல்லைக் கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை” – உதயநிதி

Jeba Arul Robinson

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,639 பேருக்கு கொரோனா

Ezhilarasan

Leave a Reply