முக்கியச் செய்திகள் இந்தியா

அதிரடியாக உயரும் உள்நாட்டு விமான கட்டணம்!

கொரோனா தொற்று காரணமாக சுணக்கத்திலிருந்த விமான சேவைகள் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், மத்திய அரசு தற்போது உள்நாட்டு விமான சேவைக்கான கட்டணத்தை 10 முதல் 30 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளது.

இந்த உயர்வு மார்ச் 31 அல்லது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமல்படுத்தப்பட்ட இந்த கட்டண உயர்வு மூலம், 40 நிமிடத்திற்கும் குறைவான விமான சேவைக்கான கண்டனமானது, ரூ.2,000லிருந்து, ரூ.2,200ஆகவும், அதிகப்பட்ச கட்டணம் ரூ.6,000லிருந்து, ரூ7,800ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்நாட்டு விமான சேவையானது 40-60, 60-90, 90-120, 120-150, 150-180, மற்றும் 180-210 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கட்டணங்கள் ரூ.2,800-9,800, ரூ.3,300-11,700, ரூ.3,900-13,000, ரூ.5,000-16,900, ரூ.6,100-20,400 மற்றும் ரூ.7,200-24,200 என உயர்த்தப்பட்டுள்ளன.

முன்னதாக இந்த கட்டணங்கள் ரூ.2,500-7,500, ரூ.3,000-9,000, ரூ.3,500-10,000, ரூ.4,500-13,000, ரூ.5,500-15,700 மற்றும் ரூ.6,500-18,600 என்கிற அளவில் இருந்த என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று காரணமாக ஏறத்தாழ 2 மாதத்திற்கு உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. பின்னர் அதனைத் தொடர்ந்து படிப்படியாக இந்த சேவை இயல்பு நிலைக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 80% அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisement:
SHARE

Related posts

முதல் பெண் ராணுவ காவலர்களின் தரவரிசைப் பட்டியலை விரைவில் வெளியிடும் இந்திய ராணுவம்!

Halley karthi

டிசம்பர் இறுதிக்குள் அதிமுக உட்கட்சி தேர்தல்

Halley karthi

பரிசோதனை-கண்டறிதல்-சிகிச்சை-தடுப்பூசி உத்தியை கையாளும்படி மத்திய உள்துறை அறிவுறுத்தல்

Halley karthi

Leave a Reply