இஸ்லாமியர்களுக்கும், திமுகவிற்கும் இடையிலான நட்பை யாராலும் பிரிக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-கின் பவள விழா கடந்த இரண்டு நாட்களாக கோலகலமாக கொண்டாடப்பட்டது. இறுதி நாள் நிகழ்வாக, சென்னை கொட்டிவாக்கத்தில் பிரமாண்ட மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளிம்பு நிலை மக்களுக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கும் திமுகவிற்கும் இடையிலான நட்பை யாராலும் பிரிக்க முடியாது. இஸ்லாமியர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி என்று கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், இஸ்லாமியர்கள் வேறு. தாம் வேறு என கருணாநிதி நினைத்ததில்லை. இஸ்லாமியர்கள் நலனுக்காக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். ஒரே நாடு, ஒரே பண்பாடு, ஒரே மொழி இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் சமூகநீதிக்கு எதிரானவர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.