மார்ச் மாதம் முழுவதும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ் சார்பில்
முன்னெடுத்துள்ள நிகரெனக் கொள் 2023 இயக்கத்தை தமிழ்நாடு முழுவதும் உறுதிமொழி
யாகவும், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை
அறிவிக்க கோரி கையெழுத்து இயக்கத்தையும் முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்று, கையெழுத்து இயக்கத்தில் கையொப்பமிட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்று, கையெழுத்து இயக்கத்தில் கையொப்பமிட்டனர்.
நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிகரெனகொள் பாலின சமத்துவ
உறுதிமொழி ஈர்ப்பு நிகழ்ச்சியில் ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.
நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் பாலின சமத்துவம் இயக்கமான நிகரென கொள் உறுதிமொழி ஏற்பு மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஏராளமான துப்புரவு பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள புஜங்கனூர் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாலின சமத்துவ உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் உள்ள விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளியில் நியூஸ்-7 தமிழ் முன்னெடுக்கும் பாலின சமத்துவம் குறித்து மாணவர்கள்
உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோபாலபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலின பாகுபாடுக்கு எதிராக சமத்துவத்தை வலியுறுத்தி , பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு எதிரான முழக்கமிட்டும், பெண்களை ஆணுக்கு நிகரென கொள்வோம் என்ற உறுதிமொழி எடுத்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்துப்பாண்டிபட்டியில் அமைந்துள்ள ஜெயசீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிகரென கொள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் வனத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் பாலின
சமத்துவத்தை வலியுறுத்தும் “நிகரென கொள்” உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வலியுறுத்தி முன்னெடுத்துள்ள கையெழுத்து இயக்கத்திலும் விவசாயிகள்
கையொப்பமிட்டனர்.
தென்காசி மாவட்டம், குமந்தாபுரம் பகுதியில் உள்ள கிங் யூனிவர்ஸ் மெட்ரிக்
மேல்நிலைப் பள்ளியில் நியூஸ்-7 தமிழ் முன்னெடுக்கும் பாலின சமத்துவம் குறித்து
மாணவர்கள் உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில்,
பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.