இனி ’கேரளா’ அல்ல…..’கேரளம்’ – பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்……!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கேரளா மாநிலத்தின் பெயரை ’கேரளம்’ என்று பெயர் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவற்றில் ஒன்றாக ‘கேரளா’ என்னும் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றக் கோரி கேரளா நீண்ட காலாமாக கோரிக்கை எழுப்பி வந்தது. இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு இது தொடர்பான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது.

இத்தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பவே மீண்டும் கடந்த 2024-ம் ஆண்டு மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற வலியுறுத்தி 2-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.