சென்னை சென்ட்ரல் பல்லவன் சாலையில் அமைந்துள்ள பல்லவன் இல்லத்தில் மாநகர போக்குவரத்து மேலாண் இயக்குநரிடம், சிஐடியு தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் நோட்டீஸ் மற்றும் கோரிக்கை மனுவை அளித்தனர்.
சென்னையில் அரசு விரைவுப்போக்குவரத்து ஊழியர் சங்கத்தை (SETC – CITU) சேர்ந்தவர்கள் போக்குவரத்து ஊழியர்களை கான்ட்ராக்ட் முறையில் இல்லாமல் நிரந்தர பணியாளராக பணிக்கு எடுக்க வேண்டும் என்றும், ஐஆர்டி (இந்தியன் ரோடு டிரான்ஸ்போர்ட்) மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக மட்டுமே ஆட்களை வேலைக்கு எடுக்க வேண்டும் என்றும், அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஊழியர்களை தேர்ந்தெடுக்க தனியாரிடம் கொண்டு செல்லக் கூடாது என்றும் வலியுறுத்தி இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசினர்.
இதையடுத்து போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் துணைப் பொதுச்செயலாளர் வி.தயானந்தம், சிஐடியு மாநில உதவி தலைவர் எஸ்.நடராஜன், உள்ளிட்டோர் இணைந்து நிர்வாக இயக்குநரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு மற்றும் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கினர்.
இதையும் படியுங்கள் : CSK vs SRH போட்டி : சேப்பாக்கத்தில் இரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கிச் சென்ற ரசிகர்கள்
மே மாதம் 3 ஆம் தேதிக்குள் தங்களது கோரிக்கைகளுக்கு சரியான தீர்வு பெறப்படவில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டம் மேற்கோள்வோம் என்று போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் துணை பொதுச்செயலாளர் வி.தயானந்தம் தெரிவித்துள்ளார்.







