தொழில் அதிபர் மீது பாலியல் புகார்: மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை

தொழில் அதிபரால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் பிரபல நடிகை அளித்துள்ள புகாரால் பரபரப்பு… யார் அந்த நடிகை…? விவரங்கள் என்ன..? விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.. மாடல்கள், நடிகைகள் எல்லாம்…

தொழில் அதிபரால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் பிரபல நடிகை அளித்துள்ள புகாரால் பரபரப்பு… யார் அந்த நடிகை…? விவரங்கள் என்ன..? விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

மாடல்கள், நடிகைகள் எல்லாம் நாளிதழ்களின் அட்டை படங்களுக்காக லேசான கவர்ச்சியை புகைப்படமாக எடுத்து அதை நாளிதழ் நிறுவனங்கள் பிரிண்ட் போட அனுமதிப்பார்கள். அந்த புத்தகங்களும் நன்றாக விற்பனையாகும். ஆனால் ஆடையின்றி படம் பிரசுரிக்க அனுமதித்த ஒரே நடிகை ஷெர்லின் சோப்ரா. நாள்தோறும் கவர்ச்சிப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இவர் கட்டுக் கடங்காத இளம் ரசிகர் பட்டாளத்தை தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்.

இந்தியில் முன்னணி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்துக்கும், பிரபல இந்தி நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கும் சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. பிறகு இருவரும் சமரசமாகி ஒன்று சேர்ந்தனர். ஷெர்லின் சோப்ராவிடம் ராக்கி சாவந்த் மன்னிப்பு கேட்டு சமரசமாகியதாக கூறப்படுகிறது. தொழில் அதிபர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்தாக மும்பை ஜூஹூ போலீசில் புகார் அளித்து நடிகை செர்லின் சோப்ரா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் பரஸ்மானி லோதா (சுனில் லோதா) தனக்கு எதிராக மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ஹிப் ஹாப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட இருந்தது. அதன் பிறகு, எனது மேலாளருடன் மும்பையில் உள்ள ஓட்டலுக்கு வந்ததாவும், அங்கு தொழிலதிபர் சுனில் பரஸ்மானி லோதா என ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஒரு வீடியோ ஆல்பம் பாடல் செய்ய வேண்டும் என கூறினார். அதற்கு சம்மதித்தேன் என்றும் புகாரில் நடிகை செர்லின் சோப்ரா தெரிவித்தார்.

மேலும், தொழிலதிபர் என்னை மிகவும் பாராட்டி, நீங்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்று அவர் தன்னிடம் கூறியதாவும், எனன் வீடடிற்கு வந்து என்னிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகாரில் அவர் கூறியுள்ளார். பாலியல் தொல்லை கண்டித்து எனது வீட்டை விட்டு விரட்டியே பிறகு மீண்டும் தொழில் அதிபர் சுனில் பரஸ்மானி லோதா பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்றும், நான் எதிர்த்ததால் என் உயிருக்கு கூட மிரட்டல் விடுத்தார் எனவும் புகாரில் நடிகை செர்லின் சோப்ரா கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், தொழில்அதிபர் சுனில் பரஸ்மானி லோதா மீது 3 பிரிவுகளீன் கீழ் ஜூஹூ காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதயைடுத்து அவரை போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால் தொழில்அதிபர் சுனில் பரஸ்மானி லோதா தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீசார் அவரை தேடி வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.