புதுச்சேரியில் ஐந்து லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகத் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மன் கோயிலுக்கு வந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது கணவர் டாக்டர் சௌந்தரராஜனுடன் இன்று சாமி தரிசனம் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதுச்சேரியில் ஐந்து லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்றும் குழந்தைகளைத் தவிர்த்து சுமார் 45 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கொரோனா மூன்றாவது அலையைச் சந்திக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்த அவர், இதில் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் குழந்தைகளுக்கானத் தனி வார்டு, ஆக்சிஜன் படுக்கைகள், வெண்டிலேட்டர் படுக்கைகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவமனைகளில் மேற் கொண்டிருப்பதாகக் கூறினார்.