உலகம் அழிந்தால் நன்றாக இருக்கும் என்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவரது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
பிச்சைக்காரன், நான், சலீம், சைத்தான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா தொடர்பாக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. “கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். ஹிரோஷிமா, நாகசாக்கில் போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிச்சிட்டா நல்லா இருக்கும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/vijayantony/status/1480507260300189699
இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் இயக்குநர் செல்வராகவன் அவரது மனதில் தோன்றும் தத்துவங்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடதக்கது. தற்போது இதேபானியில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் பின்பற்ற தொடங்கி உள்ளார்.







