தமிழ்நாட்டில் எந்த கட்டாய மத மாற்றமும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தஞ்சை பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், மாணவி மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவியின் தற்கொலைக்கு காரணம், கட்டாய மதம் மாற்றம் என்று மனுதாரர் கூறுவது நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தும் செயல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : BTS : சோதனைகளை சாதனைகளாக்கிய இளைஞர் படை…..
தம்மை வீட்டுக்கு செல்ல அனுமதிக்காமல் அதிகpபடியான வேலை கொடுத்ததால்தான் மாணவி உயிரை மாய்த்துக்கொண்டதாக மரண வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று உண்மைக்கு புறம்பான தகவலை கொண்டு நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயலும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும் என கோருவது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும், கட்டாய மத மாற்றத்துக்கு எதிரான சட்டம் கொண்டு வருவது தொடர்பான முடிவுகளை மாநிலத்தின் சட்டமன்றங்களிடம் விட்டு விட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொருத்தவரை எந்த கட்டாய மத மாற்றமும் நடைபெறவில்லை என குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவி மரண விவகாரத்தில் கட்டாய மதமாற்றம் என்று தமிழ்நாடு அரசு மீது அவதூறு கூறுவது பொய்யானது, அரசியல் உள்நோக்கம் கொண்டதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.