களக்காட்டில் சாலையோரம் வெட்டப்பட்ட மரத்தில் மர்ம நபர்கள் தீ வைத்ததால், சில மணி நேரத்தில் தீயணைப்பு துறையினா் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு அரசு மருத்துவமனை அருகில் சாலையோரம் இருந்த பழமை வாய்ந்த மரம் பட்டு போனதையடுத்து, நெடுஞ்சாலை துறையினர் மரத்தை வெட்டினா்.பின்னா் வெட்டப்பட்ட மரத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றதால், மரம் தீயில் கருகியது. மேலும் தீ கட்டுக்குள் வராமல் புகைந்து கொண்டே இருந்ததால் அருகில் உள்ள பகுதிகளுக்கும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து, களக்காடு எஸ்.டி.பிஐ கட்சியின் நிர்வாகிகள் நாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கிருந்த அதிகாரி பாபநாசம் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் தண்ணீரை வேகமாக அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
—ரூபி.காமராஜ்







