தவெக சார்பில் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் இஸ்லாமியர்களுடன் தலைப்பாகை அணிந்து பந்தியில் தரையில் அமர்ந்து நோன்பு உணவு சாப்பிட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய விஜய் ”நாம் அரசியலுக்கு வந்ததில் இருந்தே திட்டமிட்டு பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த டீம், இந்த டீம் என்று கூறுகிறார்கள். நாம் எந்த டீமும் கிடையாது; மக்களுடைய டீம். அவதூறு முயற்சிகள் வேலைக்கு ஆகாததால், விஜய் இந்த கூட்டணி, அந்த கூட்டணி சேரப் போகிறார் என்று பொய்யான பிரசாரம் செய்து கொண்டிருந்தார்கள்.
மதச்சார்பற்ற கொள்கை என்ற நிலைப்பாட்டிலும், மதச்சார்பற்ற சமூகநீதி என்ற நிலைப்பாட்டிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். இந்தக் கட்சியுடன் கூட்டணி, அந்தக் கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. நம் தலைமையில்தான் ஆட்சி அமையும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
அரசியலில் யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் இல்லை. யார் என்ன அவதூறு பரப்பினாலும், அதனை நம்ப வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நமது இலக்கை நம்மால் அடைய முடியும். இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரமலான் வாழ்த்துகள்” என விஜய் பேசினார்.







