ஆக்சிஜன் பற்றாக்குறை: காவல்துறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

சமூகவலைதளங்களில் மருத்துவ உதவி கேற்கும் நபர்கள் மீது அவதூறு பரப்புவதாக கூறி வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டது. தடுப்பூசி விலையை மத்திய அரசே…

சமூகவலைதளங்களில் மருத்துவ உதவி கேற்கும் நபர்கள் மீது அவதூறு பரப்புவதாக கூறி வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டது. தடுப்பூசி விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். குஜராத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஏன் அனுமதிக்க மறுகின்றனர் என்றும் 108 ஆம்புலன்ஸில் வந்தால் மட்டுமே நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது ஏன் என்ற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பினர்.

சமூக வலைத்தளங்களில் மருத்துவ உதவி கேட்கும் பொதுமக்கள் மீது அவதூறு பரப்புவதாகக் கூறி வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்று அனைத்து மாநில காவல்துறை தலைவர்களுக்கும் உத்தரவு பிறப்பித்தனர். இதை மீறினால் காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் தடுப்பூசிக்கான விலையை நிறுவனங்கள் முடிவு செய்ய அனுமதிக்கக் கூடாது. தடுப்பூசி விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.