தமிழகத்தில் ஒரே நாளில் 18,692 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 18,692 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,66,756 ஆக உள்ளது.
தமிழகத்தில் 2,22,78,880 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து 16,007 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை 10,37,582 ஆக உள்ளது. ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,046 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 5,473 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 3,33,804 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.







