இந்தியா செய்திகள் விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு; வெல்லப்போவது யார்!

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் பெங்களூரு அணி முதல் இடத்திற்கு என்பது அந்த அணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியின் 26வது லீக் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ளது. இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப் பரிட்சை நடத்த உள்ளன. இதுவரை நடந்த போட்டிகளில் இரு அணிகளும் தலா 6 போட்டிகளில் களம் கண்டுள்ளன. இதில் பஞசாப் அணி இரண்டு முறை மட்டுமே வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதே சமயத்தில் பெங்களூரு அணி 5 வெற்றிகளைக் கண்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிபெற வேண்டும் எனும் நெருக்கடியில் உள்ளது.

இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் இரு அணிகளும் 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணி 14 முறையும் பெங்களூரு அணி 12 முறையும் தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளன. இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில், மண்டீப் சிங், மயங் அகர்வால், தீபக் ஹூடா, கே எல் ராகுல், நிக்கோலஸ் பூரன் ஆகிய முக்கிய வீரர்கள் களமிறங்குகின்றனர்.

பெங்களூரு அணியில் படிக்கல், விராட் கோலி, மேக்ஸ்வெல், ஏபி டி வில்லியர்ஸ், சைனி மற்றும் சிராஜ் ஆகிய வீரர்கள் களமிறங்குகின்றனர். பெங்களூரு அணி இன்று நடக்க இருக்கும் போட்டியில் வென்றால் புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை கைப்பற்றும் வாய்ப்பை பெறும். மேலும் பஞ்சாப் அணி வென்றால் புள்ளி பட்டியலில் பாதுகாப்பான நிலைக்கு வர வாய்ப்புள்ளது.

Advertisement:

Related posts

இயக்குநர் ஷங்கருக்கு அந்நியன் பட தயாரிப்பாளர் திடீர் நோட்டீஸ்: என்ன நடந்தது?

Karthick

அசாமில் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பாஜக!

Ezhilarasan

ஆந்திராவில் லாரி – மினிபேருந்து மோதிய கோர விபத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் பலி

Jayapriya