“போராடிய மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது” – உச்சநீதிமன்றம் உத்தரவு

நிட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தடை வித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீது டெல்லி போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதேபோல பீகாரில் போராடிய மாணவர்களை கலைக்க ஏகே-47 ரக துப்பாக்கிகள் பயண்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாண்வர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக மனுக்கல் வந்த வண்ணம் இருந்ததால், மாணவர்கள் மீதான காவல்துறையின் தாக்குதலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது எனக்கூறி வழக்கு இன்று விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொது மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி, “டெல்லி மட்டுமல்லாமல், மகாராஷ்டிரா, பிகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. மாணவர்கள் மீது மின்சார ஷாக் கருவி ஆணி அடிக்கப்பட்ட கம்புகள், கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கிகள் ஆகியவை பயண்படுத்தப்பட்டது. மேலும் பெல்லட் குண்டு மூலம் சுட்டதால் ஒரு சிறுவன் பார்வை இழந்து இருக்கிறார்” என்று தெரிவித்து இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்பித்தனர்.

மேலும் “குவிக்கப் பட்டிருந்த போலீசாரின் சீருடை யிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தது. போலீசார் அல்லாத பலர் மாணவர்கள் போராட்டத்தை அடக்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளனர்” என்றும் வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ நீட் எதிர்ப்புக்கு போராடிய மாணவர்கள் இளைஞர்கள் மீது என்ன ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் டெல்லி, பிகார், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

மேலும் மாணவர் போராட்டம் தொடர்பான சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டும். போராடிய மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. அதற்கு தடை விதிக்கப்படுகிறது. கிரிமினல், குற்றப்பின்னணி இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.