NLC நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் – கே.பாலகிருஷ்ணன் பேட்டி..!

என்எல்சி நிருவனம் இழுத்து மூடப்பட வேண்டும் என பாமக கூறுவதை ஏற்க முடியாது. என்எல்சி நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடலூர் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில்…

என்எல்சி நிருவனம் இழுத்து மூடப்பட வேண்டும் என பாமக கூறுவதை ஏற்க முடியாது. என்எல்சி நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடலூர் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில் உள்ள அலுவலகத்தில் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை
சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது..

“ நாடாளும‌ன்ற முடக்கம், மணிப்பூர் பிரச்சினை உள்ளிட்ட நாட்டின் ஏராளமான பணிகள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உள்ளது. அதனை எல்லாம் விட்டுவிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் நடைபயணத்தை துவக்கி வைக்கின்றார்.

இதன் மூலம் பாஜகவினர் நாட்டை விட கட்சியை பலப்படுத்தவே நினைக்கின்றனர் நேற்று நிகழ்ந்த பாமக முற்றுகை போராட்டம் வன்முறையாக மாறியது  வருத்தத்திற்குரியது. என்எல்சி நிறுவனம் முறையான பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அதனை நிறைவேற்றி நிலத்தை கையகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அனைத்து கட்சிகளும் விவசாயிகளுக்காக போராடக்கூடியவர்கள் தான். என்எல்சி இழுத்து மூடப்பட வேண்டும், அப்புறப்படுத்த வேண்டும் என பாமக கூறுவது ஏற்க முடியாது. என்எல்சி நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும்” என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.